ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிரிசேன, விமானப்படை ஹெலிகொப்டரில் சென்று நிவாரணப் பொருள் விநியோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பிரதேசத்துக்கு சதுரிக்காவும் அவரது கணவரும் விமானப்படை ஹெலிகொப்டரில் வந்திறங்கியுள்ளனர்.
தனமல்வில பொது மைதானத்தில் ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து காரொன்றில் கிதுல்கோட்டே பிரதேசத்துக்குத் தரைவழியாக சென்றடைந்த சதுரிக்கா குழுவினர், கிராம மக்களுக்கு நிவாரணப் பொருள்களை விநியோகித்துள்ளனர்.
அவ்வாறு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொதியிலும் ரூ.5 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்துக்கு அரச அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னரும் அரச வளங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோக செயற்பாடுகளில் சதுரிக்கா ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அரச வளங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோக செயற்பாடுகளில் சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா