Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழ விடுதலை மாவீரர்காள்

மேளம் கொட்டி வீரவணக்கம்

தேசத்தின் விடுதலை வேள்வி

தேமதுரமாய் இனித்ததோ தேகம் இழந்தீர்

எதிரிகளின் வஞ்சகத்தால் நீவிர் பலி

எங்கள் நெஞ்சகத்தில் இணையில்லா வலி

போருக்கு அஞ்சா பொறுப்பாளர்கள்

நெருப்பையும் வெல்லும் நெறியாளர்கள்

ஈழ விடுதலையின் ஊட்டச்சத்து

ஈழ மக்களின் அழிவில்லா சொத்து

சிதைக்கப்பட்டீர் எம்மில் விதைக்கப்பட்டீர்

கதைக்கப்பட்டு ஈழ வரலாற்றுக்கு காவியமானீர்

உங்களின் வீர தியாகத்தால் போர்கோலம் பூண்டோம்

எங்களின் போராட்டத்தில் ஏற்றம் கண்டோம்

எங்களின் ஐந்தாம் ஈழப்போர் வெற்றி

உங்களுக்கு இன்றே அர்ப்பணம்

காவிய நாயகர்களே கடமை மறவர்களே - அழிவில்லா

ஓவியமாநீர் தமிழர் நெஞ்சினிலே

தாவி ஓட தமிழீழம் தயாராகிவிட்டது

பாவிகளுக்கு வயிறு பற்றியெரிய தொடங்கிவிட்டது

உறுதி எடுப்போம் உலக தமிழினமே உண்மையாக

இறுதி ஊர்வலம் தயார் செய்வோம் இன வெறி சிங்களத்திற்கு

ஒலிக்க போகிறது தமிழ் தேசிய கீதம் உலகெங்கும்

வலிக்கப்போகிறது வஞ்சகர்களின் உடலெங்கும்

தமிழனாய் பிறந்தோர்க்கு தமிழீழமே தாய்நாடு

தரணியில் தமிழீழம் மட்டுமே கூடு

அங்கீகரிக்கும் நாடுகளின் ஆதரவோடு

அமைத்திடுவோம் தமிழீழ தனியரசை

ஈழத்தின் இடியோசை இலங்கையை தகர்க்கட்டும்

இந்தியாவே அதிர்ந்து போகட்டும்

வெல்லட்டும் தமிழினம் வெல்லட்டும்

சொல்லட்டும் உலகம் அதை சொல்லட்டும்

ஈழத்தை ஆள்வோம் இவ்வுலகை வெல்வோம்

ஈழத்தை இதயத்தில் சுமக்கும் இனிய தமிழன்

நாம் தமிழர்

ஏ.சேகர்

0 Responses to ஈழ விடுதலையின் ஊட்டச்சத்து - மாவீரர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com