தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தியுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக்கான மூன்றாவதுநாள் விவாதத்தை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் - உறவுகளுக்கு இந்த வாரம் அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மாவீரர்களுக்கு கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அஞ்சலி!