Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தனக்கு எதிராக கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளமாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் ரவி கருணாநாயக்கவிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்திற்கு எதிராக கூறுவதற்கும், செய்வதற்கும் ஒன்றும் இல்லாமையினால், எதிர்க்கட்சியில் செயற்படுகின்றவர்களினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முயற்சிக்கப்படுகின்றது“ என்றுள்ளார்.

0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்: ரவி கருணாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com