ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ். (IS -ISIS)) பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் ஆலோசனை நடத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் கடந்த மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு நட்பு நாடுகளை பிரான்ஸ் கேட்டுக் கொண்டது. பிரான்ஸின் அந்தக் கோரிக்கையை ஏற்று, சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜெர்மனியும் சம்மதித்தது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் பேசியுள்ளார். அப்போது, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஒபாமா- கமரூன் ஆலோசனை!