Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் கொலைக் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த வீடியோ பதிவில், வசீம் தாஜூதீன் C.R & F.C விளையாட்டு மைதானத்திலிருந்து வெளியேறும் காட்சிகளும், அதன்பின்னர் அவர் கடத்திச் செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்படுவது வரையிலுமான காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் குறித்த காட்சிகளை இரகசியப் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலையுடன் அரசியல் பிரமுகரின் குடும்பம் தொடர்புபட்டிருப்பதாக உறுதியாகியுள்ளதாகவும், தற்போது கிடைத்துள்ள வீடியோ காட்சிப் பதிவுகளில் குறித்த அரசியல் பிரமுகரின் குடும்பத்தில் உள்ளவர்களின் காட்சியும் இருப்பதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

0 Responses to வசீம் தாஜூதீன் கொலை வீடியோ பதிவு இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com