ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விதத்தில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகள் பற்றிய
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கைகளை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பிரசாரம் செய்துவரும் அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர்.
பிரிட்டன் வெளியேறினால், தனிமைப்படுத்தப்படும் என்றும் வணிக உறவுகள் பாதிக்கப்படும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் கூறுவதையே 'கிளிப் பிள்ளை பேச்சாக' ஒபாமா ஒப்புவிப்பதாக யூகிப் என்ற ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமரை ஆதரிப்பதற்காக உலகத் தலைவர்கள் 'அணி சேர்கின்றனர்' என்று ஃபராஜ் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் மக்கள் வெளியாரிடமிருந்து வரும் செய்திகளை பெரும்பாலும் உள்வாங்க மாட்டார்கள் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியாம் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.
'பிரிட்டன் வெளியேற வேண்டும்' என்ற பிரசாரத் திட்டத்தின் இணைத் தலைவரான தொழிற்கட்சி எம்.பி. கிஸேலா ஸ்டுவர்ட், 'ஒபாமாவின் கருத்து தவறு' என்றும் பிரிட்டனை 'சங்கிலியால் பிணைத்திருக்கும் இயக்கமற்ற அமைப்பு தான்' ஐரோப்பிய ஒன்றியம் என்றும் விமர்சித்துள்ளார்.
பிபிசி தமிழ் செய்திகள்

0 Responses to ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: 'ஒபாமாவின் கருத்து கிளிப் பிள்ளை பேச்சு'