Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாம், தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடுப்பிடித்து, வருகிற 16ம் திகதி தேர்தல் நடக்க உள்ளது. வைகோ மதிமுகவை மற்ற கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி என்று இணைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அவர் தாம் கோயில் பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார்.ஆனால், சற்று முன்னர் தாம் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

தம்மைக் குறிவைத்து சாதிப் பிரச்சனையைத் தூண்டி விட்டு, கலவரத்தை உண்டு பண்ணத் திட்டமிட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தாம் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் தேவர் சிலைக்கு மாலை போட சென்ற வைகோவை, தொண்டர்கள் சிலர் வழி மறித்தால் அங்கு கலவரம் உருவானது. இதையடுத்து தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்ற வைகோ, வேட்பு மனுவையும் தாக்கல் செய்யவில்லை. பின்னர் திமுக தம்மை வைத்து சாதிக் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டு இருப்பதால், தாம் சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்தே விலகிக் கொள்ள உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

0 Responses to வைகோ தேர்தலில் போட்டியிடவில்லை:வைகோ அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com