நாட்டில் நீடித்து வந்த யுத்தத்தை இராணுவத்தினரின் துப்பாக்கிகளைக் கொண்டு தோற்கடித்துள்ள போதிலும், ஈழக் கொள்கையைத் தோற்கடிக்க முடியாமற்போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியாமற்போகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஜெனீவா பிரேரணையும் பொருளாதார நெருக்கடியுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை 2 வருடங்கள் முன்னதாகவே நடத்துவதற்குப் பிரதான காரணங்களாக அமைந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு அரசியல் கட்சியொன்று தேவை எனவும் அரசாங்கத்தை அமைப்பது பற்றிப் பேசுவது முக்கியமில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சிறந்த கட்சியாக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அம்பலாங்கொடையில் அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to யுத்தத்தை வென்றாலும், ஈழக் கொள்கையை தோற்கடிக்க முடியாமற்போனது: ஜனாதிபதி