சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் (Margot Wallstrom) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்துள்ளார்.
அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகருடனும் சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவீடன் வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் முன்னணி வர்த்தக துறையின் 7 பிரதிநிதிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுவீடன் வெளிவிவகார அமைச்சர் நாளை செவ்வாய்க்கிழமை வடக்கிற்கு சென்று, வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன் போது நலன்புரி முகாம்களிற்கும் செல்லவுள்ளதுடன், சிவில் அமைப்புகளையும் சந்திக்கவுள்ளதாகவும், மறவன்புலவு வீட்டுத் திட்டத்தை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; இன்று மங்களவோடு சந்திப்பு; நாளை வடக்கு விஜயம்!