வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தனித்த ஒரு மாநிலமாக உருவாக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள அரசியலமைப்பு மற்றும் தீர்வுத்திட்ட யோசனைகளுக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வடக்கு- கிழக்கு இணைப்பு குறித்த வடக்கு மாகாண சபையின் முன்மொழிவு ஒரு தலைப்பட்சமானது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஏ.எல்.அதாவுலா தலைமையில் அக்கரைப்பற்றில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேசியக் காங்கிரஸ் கட்சியின் கூட்டமொன்றிலேயே மேற்கண்ட விடயங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும், முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கு மாகாண சபையின் வடக்கு- கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு!