Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும், திமுக-அதிமுக இடையேயான வாக்கு வித்தியாச சதவிகிதம் வெறும் 2.8 என்று தகவல் வெளியாகி
உள்ளது.

அதிமுக 41 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது, திமுக 38 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது.இடையில் 2.6 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டு உள்ளது.இதில் தேமுதிக பெற்ற வாக்கு சதவிகிதம் 2.4 என்று இருக்கிறது என்பதால், திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தால் கட்சிக்கு முகவரியாவது கிடைத்திருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வைகோ கோயில்பட்டியில் போட்டியிடாமல் பின்வாங்கிய நிலையில், அங்கு நிறுத்தப்பட்ட மதிமுக வேட்பாளர் 3ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் என்பதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெறும் 65 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதும் இந்தத் தேர்தலின் சுவாரஷ்யமான விஷயங்கள்..

0 Responses to அதிமுக - திமுக இடையேயான வாக்கு வித்தியாச சதவிகிதம் வெறும் 2.8

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com