தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதில் பாஜக எம்பியான பொன்.ராதா கிருஷ்ணன், மக்கள் நலக் கூட்டணியை புறக்கணித்து மக்கள் நல்ல முடிவை எடுத்து இருக்கிறார்கள் என்றும், அதிமுகவின் வெற்றி பாராட்டுதல்களுக்கு உரியது என்றும் கூறியுள்ளார்.
அதோடு, திமுகவின் தோல்வி என்பது மிகப் பெரிய தோல்வி அல்ல என்றும், இதுவும் ஒரு வகையில் வெற்றிதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் மற்றவர்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்து லாபம் அடைந்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும் ராதா கிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.
அதோடு இந்தத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால் மாநிலத்துக்கு செய்ய வேண்டிய நலத் திட்டங்களில் குறைவிருக்காது என்றும், நலத்திட்டங்கள் மேலும் அதிகமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Responses to தேர்தலில் மற்றவர் முதுகில் சவாரி செய்து லாபம் அடைந்தது காங்கிரஸ்தான்: பொன்.ராதா கிருஷ்ணன்