Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழகத்தில் தற்போதுள்ள நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் பொது நுழைவுத் தேர்வு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வற்புறுத்தக் கூடாது எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அத்தகைய நடைமுறையை மேலும் ஓராண்டுக்குத் தள்ளிவைக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதற்கு, குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அவசரச் சட்டம், இந்த ஆண்டுக்கான பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வு காணுமே தவிர, நிரந்தரத் தீர்வாக அமையாது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் சம வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இளங்கலை தொழில்முறை படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் தமிழக அரசு ரத்து செய்தது. அத்தகைய சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளதை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பொது நுழைவுத் தேர்வு என்பது, தமிழகத்தின் தற்போதைய சமூக, பொருளாதார நிலைக்கும், நிர்வாகத் தேவைகளுக்கும் உகந்ததாக இல்லை என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மருத்துவ நுழைவுத் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com