மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றியுள்ளவர்களே அவரை அழித்து வருவதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோரின் கயிற்றை விழுங்கியே முன்னாள் ஜனாதிபதி, உகண்டா ஜனாதிபதியின் பதவி ஏற்பில் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மட்டத்தில் விமர்சனத்துக்குள்ளான நபர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்றியிருக்க கூடாது என்று குறிப்பிட்ட டிலான் பெரேரா, மஹிந்தவை சுற்றியுள்ள ஆலோசகர்கள் நாட்டை மீட்ட தலைவரை அழித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே டிலான் பெரேரா மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உகண்டா சென்றது குறித்து வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டிலான் பெரேரா, “தன்னைச் சுற்றியுள்ள ஆலோசகர்கள் குறித்து மஹிந்த ராஜபக்ஷ அவதானமாக இருக்க வேண்டும். இவர்களின் ஆலோசனைப்படியே அவர் உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பில் பங்கேற்றார்.
உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பன்று எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தின. இதற்கு எதிராகவா அவர் அங்கு சென்றார். இந்த வைபவத்தில் ரொபட் முகாபே, உமர் அல் பசீர் போன்ற சர்வதேச விமர்சனத்துக்குள்ளான தலைவர்களே கலந்து கொண்டிருந்தனர்.
தான் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக இருப்பதால் தன்னால் வர முடியாது என மஹிந்த ராஜபக்ஷ மறுத்திருக்க வேண்டும். அவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. அவரை தருவிக்கும் தேவை உகண்டாவுக்கு இருந்தது போன்று அவரை அனுப்ப வெளிவிவகார அமைச்சு டிக்கட் வசதிகளை வழங்கியுள்ளது.
தன்னை சுற்றியுள்ள விமல் வீரவங்க உதய கம்மம்பில, தினேஷ் குணவர்தன பஷில் ராஜபக்ஷ போன்றோரின் கயிற்றை விழுங்கி மஹிந்த உகண்டா சென்றார். இவர்களால் மஹிந்த ராஜபக்ஷவை காக்க முடியவில்லை. அவர் சுதந்திரக் கட்சி கொள்கையின்படி செயற்பட்டிருந்தால் அங்கு (மஹிந்த) இந்த ஆலோசகர்கள் அழிக்கிறார்கள். அதனாலே பொருத்தமில்லாத இடங்களுக்கு அவரை அனுப்புகிறார்கள் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்பந்தத்தை தான் செய்கிறார்கள். 6வது தடவையாக பதவி ஏற்கும் உகண்டா ஜனாதிபதி குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இது கட்டாயம் பங்கேற்க வேண்டிய வைபவம் அல்ல.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ளவர்களே அவரை அழிக்கின்றனர்: டிலான் பெரேரா