வாள்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் பாவனையால் வடக்கில் தொடரும் அச்சுறுத்தலான நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரட்நாயக்காவிடம் வடக்கு மற்றும் கொழும்பு புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரைச் சந்தித்தபோதே இந்தக் குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடிய வடக்கு மற்றும் கொழும்பைச் சேர்ந்த புத்திஜீவிகள் வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது வடக்கு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில்கொண்டு அவசர நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி குற்றச்செயல்களைத் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த அவசர நடவடிக்கைக் குழுவே முதலில் சட்டம் மற்றும் ஒழுங்குககள் அமைச்சர் சாகல ரட்நாயக்காவை நேற்று சந்தித்தது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், பொலிஸ் உயர் அதிகாரியும் அமைச்சருடன் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது புத்திஜீவிகள் சார்பில் கலந்துகொண்டோர், வடக்கில் தொடரும் குற்றச்செயல்களை எடுத்துக்கூறினர். இதனைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர், வடக்கின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை ஏற்றுக்கொண்டார். எனவே, உடனடியாக பொலிஸ் மா அதிபருடன் உரையாடி உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அடுத்தவாரம் அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் அவருடன் கலந்துரையாடி வடக்கில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துவதாகவும், அதற்காக தனது செயலாளரையும் வடக்குக்கு அனுப்பி குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும், சமூகத்தோடு இணைந்து பொலிஸார் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கில் அதிகரித்துள்ள வன்முறைகளை கட்டுக்குள் கொண்டுவர புத்திஜீவிகள் கோரிக்கை!