வடக்கு- கிழக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ள வெள்ளை வான் கடத்தல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரியும், முன்னாள் போராளிகள் திடீரெனக் கைதுசெய்யப்படுவதை நிறுத்தக் கோரியும் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வடக்கு- கிழக்கு மாகாணத்திலிருந்து பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
கொழும்பு, புறக்கோட்டையிலுள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று முற்பகல் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை சென்றனர்.
"முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவதை உடனே நிறுத்து!'', "வெள்ளை வான் கடத்தல் வேண்டாம்!'', "நல்லாட்சி அரசிலும் வடக்கு- கிழக்கில் இராணுவ ஆட்சியா?'', ""இரகசிய முகாம்களை உடனே மூடு!'', "கைதுசெய்யப்பட்ட எமது பிள்ளைகளை விடுதலை செய்'' என்று எழுதப்பட்ட பதாகைகளையும், சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர். அத்தோடு, ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரியிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.
இதேவேளை, "கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படவேண்டும்'' என வலியுறுத்தும் மகஜர் ஒன்றையும் போராட்டத்தில் கலந்துகொண்டோர் அமைச்சர் மனோ கணேசனிடம் கையளித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கான மகஜர்களை இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு குழுவினர் ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகைக்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, ஐக்கிய சோசலிஷ முன்னணியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

0 Responses to மீள ஆரம்பித்துள்ள வெள்ளை வான் கடத்தல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி கொழும்பில் போராட்டம்!