Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் வடக்கு அமர்வுகள் நிறைவடைந்துள்ளன.

இதன்பிரகாரம், எதிர்வரும் காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் வடக்கு மாகாணத்தில் எந்தவித சாட்சிகளும் பதிவு செய்யப்பட மாட்டது என்று அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், வடக்கு மாகாணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சிகள் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இம் மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் 4ஆம் திகதி வரை மட்டக்களப்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை 3200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார். எனவே வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் குறித்த தினத்தில் வாய் மொழி மூலம் சாட்சிகள் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கிழக்கின் ஏனைய மாவட்டங்களான அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகியவற்றிலும் சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி குறித்த சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை முடிந்ததும் ஆணைக்குழு இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான பரணகம ஆணைக்குழுவின் வடக்கு அமர்வுகள் நிறைவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com