ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும், பழிவாங்கும் எண்ணத்திலும் செயற்படுகின்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் ஹிரியல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்தில் நாம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திய போதிலும் எமக்கான பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், தற்போது எமது பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் காரணங்களுக்காகவே தற்போதைய அரசாங்கம் எமது பாதுகாப்பினை குறைத்துள்ளது. கட்சிக்காக மெய்யாகவே உழைத்தவர்கள் கட்சித் தலைமையினால் துன்புறுத்தப்படுகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி பழிவாங்கும் எண்ணத்தில் செயற்படுகின்றார்: மஹிந்த