கடந்த வார இறுதியில் அமெரிக்கா நடத்திய வான் வழித் தாக்குதலில் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பலியாகி விட்டதாக அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது.
இது தொடர்பான அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிக்கையில் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப் பட்டது ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப மேற்கொள்ளப் பட்டு வரும் முயற்சியில் ஓர் முக்கிய மைல் கல் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதிபர் ஒபாமா மேலும் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தையை நிராகரித்து வந்ததால் பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டு வந்துள்ளனர் என்றார். இதனால் இனி வரப் போகும் தலிபான் தலைவராவது அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். தற்போது வியட்நாமுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போதே அதிபர் ஒபாமா ஊடகப் பேட்டியின் போது இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வியட்நாமில் அதிபர் ட்ரன் டாய் குவாங் இனை சந்தித்த அதிபர் ஒபாமா அந்நாட்டுக்கான சட்டரீதியான ஆயுத விற்பனைக்கான தடையை அமெரிக்கா நீக்கியிருப்பதாகவும் அறிவித்துள்ளார். தென் கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் இராணுவமான சீன இராணுவத்துக்கு அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவும் வியட்நாமும் 4 தசாப்தங்களுக்கு முன்னர் போரில் ஈடுபட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் 1995 இல் வியட்நாமுடனான உறவு மறு சீரமைக்கப் பட்டதை அடுத்து அங்கு செல்லும் 3 ஆவது அமெரிக்க அதிபராக ஒபாமா விளங்குகின்றார்.

0 Responses to அமெரிக்க வான் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பலி?