சனிக்கிழமை முதல் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிலுள்ள சினாபங் எரிமலை வெடித்துச் சிதறி ஆக்டிவாக இயங்கி வருகின்றது.
இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருப்பதாக அந்நாட்டு அனர்த்த முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் எரிமலை அருகே ஆபத்தான பகுதிகளில் இன்னமும் குடியிருப்புக்கள் பல இருப்பதால் நிவாரணப் பணி தீவிரமாக முடுக்கி விடப் பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் சுமார் 16 பேர் உயிரிழந்து இருந்தனர். ரிங் ஆஃப் ஃபைர் எனப் படும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவில் உலகிலேயே பல உயிர் எரிமலைகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் பங்களாதேஷுக்கு அண்மையில் வங்கக் கடலில் உருவான ரோனு புயல் கடந்து சென்றதில் தென் கடலோரப் பகுதியில் கடும் மழையும் சூறாவளிக் காற்றும் தாக்கி 24 பேர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் 5 இலட்சம் பேர் பாதிக்கப் பட்டும் உள்ளனர். இந்த ரோனு புயல் தான் சமீபத்தில் சிறிலங்காவிலும் பாரிய மழை வீழ்ச்சியை ஏற்படுத்தி உயிரிழப்புக்களையும் கடும் சேதாரத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதைத் தவிர வங்கக் கடல் அருகே தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் ரோனு புயலால் அடுத்தடுத்து கன மழை பெய்தது.
தற்போது சிட்டாகொங் விமான நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளதுடன் பொது போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளது. வங்கத்தில் 1970 மற்றும் 1991 இல் ஏற்பட்ட புயல்கள் வரலாற்றில் பதியப் பட்ட மிக மோசமான புயல்கள் ஆகும். இதனால் 1970 ஆம் ஆண்டு 5 இலட்சம் பேரும் 1991 இல் 1.4 இலட்சம் பேரும் உயிரிழந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தோனேசியாவின் சுமாத்திராத் தீவிலுள்ள சினாபங்க் எரிமலை வெடிப்பு: 7 பேர் பலி