ஈழத்தமிழர்களின் தொப்புக் கொடித் தேசமாக விளங்குகின்ற தமிழகத்தினுடைய மாண்புமிகு முதல்வராக தாங்கள் வெற்றி பெற்று அரியணை அமர்வதும், தங்கள் ஆட்சி மலர்வதும் ஈழத்தமிழர்களாகிய எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
தங்கள் கட்சி பெற்ற வெற்றிக்கும் மாண்புமிகு முதல்வராக தாங்கள் பதவி ஏற்கின்றமைக்கும் எங்களுடைய வாஞ்சைமிகு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் பதவி ஏற்கின்ற வேளை ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான அத்தியாய காலமாக பார்க்கப்படுகிறது.
2009ம் ஆண்டின் பிற்காடு எங்களிடையே ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூன்யவெளி தமிழகத்தின் பொறுப்பை அதன் செயலாற்றுகையை ஈழத்தமிழர் மீது அதிகரித்திருக்கின்றது.
தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மட்டுமின்றி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அமைகளாக முழுமையாக வாழும் நிலைக்கு அண்மித்து விட்டோம். வாழ்வுரிமை என்பது கேள்விக்குரியதாக எம்முன்னே எழுந்து நிற்கின்றது.
அரச இன ஒடுக்குமுறையாளர்களின் நவவாத சிந்தனைகளும் நவவாத செயல்களுமே இங்கு அரங்கேறுகிறது.
ஒடுக்கு முறையாளர்களின் அதிகாரமே தமிர்களின் எல்லா உரிமைகள் மீதும் கோலோச்சுகின்றது.
இந்நிலையில் தங்களால் சட்டசபையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றிய போதும் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரிய போதும் ஈழத்தவர்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய தன்னாட்சி அவர்களுக்கே உரிய சுயநிர்ணய அடிப்படையில் வழங்கப்படவேண்டும் என முன்மொழிந்த போதும் நாங்கள் அழுத விழி துடைத்து அனந்தக் களிப்புற்றோம்.
நம்பிக்கையின் சக்கதியாக எங்கள் இதயங்கள் உங்களை நோக்குகிறது.
முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருந்த அனுதாபம் தன்னாட்சியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அவர் எடுத்தஇதய பூர்வமான முற்சிகளை நிறைவு செய்து ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் துயர் தீர்ப்பது தங்களின் பெரும் கடமையும் பேறும் ஆகும்.
தங்களுடைய புதிய ஆட்சிக் காலம் தமிழகத்தில் வாழுகின்ற மக்கள் நல்லாட்சியும் உங்கள் இரத்த உறவுகளான ஈழத்தமிழர்கள் தன்னாட்சி பெறவும் பயன் தர வேண்டும் என வாழ்த்துகிறோம்.
என தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அபார வெற்றி பெற்றமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஈழத்தமிழர்களின் இதயத்திலிருந்து....