Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப் படையினரை களத்தில் இறக்குமாறு யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிஸாருக்கு உதவியாக விசேட அதிரடிப் படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறும் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி பணித்துள்ளார்.

பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த நீதிபதி எம்.இளஞ்செழியன், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களாகிய அராலி, வட்டுக்கோட்டை, சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் போன்ற இடங்களில் விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்வதற்கு விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தந்தப் பிரதேச பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

குற்றச்செயல்கள் நிலைமைகள் குறித்து நீதிபதியிடம் விபரித்த யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டு, சந்தேகத்திற்குரியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் மாலை 06.00 மணியில் இருந்து விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் அணியின் ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும் குற்றச்செயல்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்த வண்ணம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி எம்.இளஞ்செழியன், வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதலாக விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்துமாறு பணிப்புதை விடுத்தார்.

0 Responses to யாழில் வாள்வெட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையை களத்தில் இறக்க நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com