Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத் பொன்சேகா முட்டாள்தனமான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொன்சேகா வெளியிடும் கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், தான் வேறு வேலைகள் பார்க்க நேரம் கிடைக்காது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை ஆஜரான கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலமளித்த பின்னர், ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்போதே போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “விடுதலைப் புலிகளை நாட்டில் இருந்து இல்லாதொழித்ததால், புலிகளின் முதல் இலக்காக மஹிந்த ராஜபக்ஷவே காணப்படுகிறார். அவருக்கு இருக்கும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு அவருக்கு தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பை வழங்க வேண்டும். யுத்தம் இல்லை என்பதால், அச்சுறுத்தல் இல்லை என்று அர்த்தமாகாது. அச்சுறுத்தல் இன்னும் இருக்கின்றது. நபர்களின் பாதுகாப்பும் நாட்டின் பாதுகாப்பும் இது போன்றுதான்.” என்றுள்ளார்.

0 Responses to பொன்சேகா முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுகின்றார்: கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com