கராச்சியின் செக்டர் 11 இலுள்ள உணவு விடுதியில் இவர் இரவு உணவு உண்டு கொண்டிருக்கும் போதே இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 நபர்கள் சராமரியாகத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது ஷக்கியுடன் உணவருந்திக் கொண்டிருந்த ராவோ கலீட் என்ற இன்னொரு பத்திரிகையாளர் மோசமாகக் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்தக் கொலைத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை. சுட்டுக் கொல்லப் பட்ட ஷக்கி முன்னால் பத்திரிகையாளர் மட்டுமன்றி இணைய சமூக வலைத் தளங்கள் மூலமாகவும் புரட்சி நிகழ்த்தி வந்தவர் ஆவார். மனித உரிமைகள் மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காக இவர் ஆரம்பித்த LUBP (Let Us Build Pakistan) என்ற ஃபேஸ்புக் வலைத்தளம் மிகப் பிரசித்தமானது ஆகும். எனினும் இத்தளத்தத்தில் அரசுக்கு முரண்பாடான கருத்துக்கள் இருப்பதாகக் கருதி பாகிஸ்தான் தொலைத் தொடர்பு அமைச்சு அண்மையில் LUBP தளத்தை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
0 Responses to பாகிஸ்தானில் முன்னணி மனித உரிமை ஆர்வலர் கராச்சியில் சுட்டுக் கொலை