Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு - கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும், அதனை மீள கையளிப்பது தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இராணுவத்திடமுள்ள மொத்தக் காணிகளின் விவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதில் இராணுவத்தினரின் முகாம் மற்றும் பிறபாவனையில் உள்ள நில விபரங்கள், பயன்பாடுகள் இன்றி பாதுகாப்பின் நிமித்தம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விவரம் எனத் தனித்தனியாக தொகுக்கப்படுவற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.

இவ்வாறு தொகுக்கப்படும் விவரங்களில் வெற்றுக் காணிகளாக உள்ளவற்றில் உடனடியாக விடுவிக்கப்படக் கூடியவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்யப்படவுள்ளது.

இந்தச் சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் அரச அதிபர் தவிர்ந்த, வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய அரச அதிபர்கள், காணி மற்றும் மீள்குடியேற்றச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், படை உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

0 Responses to வடக்கு - கிழக்கில் இராணுவத்திடமுள்ள காணிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஆராய்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com