Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டிருந்த வலி.வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று காங்கேசன்துறை ரயில்நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன.இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில், காங்கேசன்துறை வீதி வழியாக குறுகிய நேரத்தில் போக்குவரத்து செய்யக்கூடியதாக காணப்படுவதாக பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அத்தோடு, விரைவில் காங்கேசன்துறை ரயில் நிலையமும் மக்கள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to காங்கேசன்துறை ரயில் நிலைய வீதி திறப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com