புதிய அரசியலமைப்பினூடு நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் பலப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குப் பொருத்தமான ஓர் அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல் சட்டநிபுணர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரதும் பொறுப்பு ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொதுமக்களின் விருப்பத்திற்கு அமைவாக அன்றி, அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.
புதிய அரசியலமைப்பு மாத்திரமன்றி அரசின் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் சுதந்திர ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சிலபோது அவை விசித்திரமாகவுள்ளதெனவும், நாட்டின் நன்மைக்காக அன்றி நாட்டின் அழிவுக்காக இணையதளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாதெனவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பினால் ஜனநாயகமும், இறைமையும் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி