கொஸ்கம - சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியம் வெடித்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளதாவது, “யுத்தம் இடம்பெற்று ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும் அவற்றை நீக்க முன்னாள் ஜனாதிபதியினாலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதன்படி அதன் பொறுப்பு அவர்களால் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களால் குறித்த ஆயுதங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவ்வாறு நடைபெறவில்லை. அவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பின் உத்தியோகபூர்வ எழுத்து மூல ஆவணங்களை வெளியிட வேண்டும்.
இதற்கு முன்னதாக, 2009ஆம் ஆண்டு வவுனியாவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடித்ததோடு, 2014ஆம் ஆண்டும் அதுபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றது. எனினும் ஊடகங்கள் அக்காலத்தில் அதனை வெளிப்படுத்தவில்லை. அன்று இது குறித்து நடவடிக்கை எடுக்காது இன்று, அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்புக்கு மஹிந்தவும், கோத்தபாயவுமே காரணம்: அகில விராஜ் காரியவசம்