Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சுதந்திர தினத்தின் போது தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சட்டவிரோதமானது என்று தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த விசாரணையானது உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் அடங்கிய குழு முன்னிலையில் இடம்பெறும் என்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் நீதியரசர் ஈவா வனசுந்தர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மனுவினை பேலியாகொடையை சேர்ந்த மூவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரம்; செப் 01ஆம் திகதி வழக்கு விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com