துருக்கியின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டு இராணுவத்தின் ஒருபகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி எரடோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கிய பாராளுமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத்தின் ஒரு பகுதியினர், ஆட்சியதிகாரம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக அறிவித்தனர்.
ஆயினும், துருக்கியில் ஏற்பட்டது சிறிய தொகுதி இராணுவத்தினரின் அத்துமீறல் என்று அறிவித்த அந்நாட்டு ஜனாதிபதியும், பிரதமரும் புரட்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக பொதுமக்களை போராட அழைத்தனர். இந்த நிலையில், வீதிகளில் இறங்கிய பொதுமக்கள் புரட்சிக்கார இராணுவத்தினரை பெரும்பாரும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து, இராணுவப் சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சதிப்புரட்சியோடு சம்பந்தப்பட்ட 800 பேர் வரையில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இன்னும் சில பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to துருக்கி இராணுவப் புரட்சி முறியடிப்பு: ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட 800 பேர் கைது!