பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறை வளாகத்தை சுற்றி போடப்பட்டிருந்த 144 தடையுத்தரவை அம்மாநில காவல்துறை மேலும் நீட்டித்து உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறை வளாக்கத்தில் இருக்கும் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, அதிமுக தொண்டர்கள் பார்ப்பன அக்ரஹார சிறை வளாகத்தை சுற்றி தினமும் குவிந்து வருகின்றனர்.
எனவே, பெங்களூருவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெங்களூரு காவல்துறை, சிறை வளாகத்தை சுற்றி போடப்பட்டு இருக்கும் 144 தடையுத்தரவை மேலும் நீட்டித்து உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஜாமீன் மனுவின் மீதான
விசாரணையும் வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப் பட்டு உள்ளதால்,
அதிமுகவினரின் வருகையைக் கட்டுப்படுத்த முடியாது என்கிற நோக்கில் இந்த 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது.
மேலும், ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையிலும் அரசு தரப்பில் மீண்டும் வாதாட வழக்கறிஞர் பவானி சிங் முடிவெடுத்து உள்ளார் என்றும், அவர் கால அவகாசம் கேட்டதாலேயே ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது.

0 Responses to பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரத்தைச் சுற்றி தடையுத்தரவு நீட்டிப்பு!