மக்கள் விரோத அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) முன்னெடுக்கவுள்ள பேரணி தடைகள் தாண்டி வெற்றி பெறும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நாளை வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ள பேரணி, எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் நிறைவு பெறும். பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. அரசாங்கத்தினால் எத்தகைய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் இதனைத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசமைப்பில் காணப்படும் பாரதூரமான பிரச்சினைகள், உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தடுக்கும் அரசின் செயற்பாடு, வற் வரி அதிகரிப்பு, இலங்கை - இந்திய ஒப்பந்ததில் அரசாங்கம் காட்டும் ஆர்வம், கூட்டு எதிரணியினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல், இராணுவத்தினரைத் தண்டிக்கும் போர்க்குற்ற விசாரணைக்கு அரசாங்கம் காண்பிக்கும் ஆர்வம் போன்ற விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் அனைத்து தொழிற்துறையினருக்கும், மாணவர்களுக்கும் எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும்.
கூட்டு எதிரணியில் அங்கும் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மஹாஜன எக்சத் பெரமுன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, புதிய ஹெல உறுமய, ஜனநாயக சோசலிஷ முன்னணி, தேச விமுக்தி கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, மக்கள் சேவைக் கட்சி, சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளன.” என்றார்.

0 Responses to கூட்டு எதிரணியின் பேரணி தடைகள் தாண்டி வெற்றிபெறும்: தினேஷ் குணவர்த்தன