Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச துறையில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உள்வாங்குவதாக தெரிவித்த நல்லிணக்க அரசாங்கம், பதவியேற்று 19 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் தமக்கு வேலைகளை வழங்கவில்லை என்று தெரிவித்து வேலையில்லாப் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். அரச செயலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கான அழைப்பை வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் விடுத்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தென்பகுதியைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சிலரும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் முனசிங்க தலைமையில் கலந்து கொண்டனர்.

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தேசியக் கொள்கையாக இருந்து வருகின்ற போதிலும், கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பட்டதாரிகளை அரசாங்கங்கள் உள்வாங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் பாராமுகமாகவே நடந்து கொள்வதாக வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் துஷாந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, நாடளாவிய ரீதியில் 30,000 பட்டதாரிகள் வேலையற்றவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், அரசத் திணைக்களங்களில் சுமார் 50,000 வெற்றிடங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் வெறும் பேச்சளவிலான உத்தரவாதங்களைக் கைவிட்டு வேலையற்றிருக்கின்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்று பட்டதாரிகள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் முனசிங்க வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to வேலை வாய்ப்புக் கோரி வேலையில்லாப் பட்டதாரிகள் யாழில் ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com