மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பேராசையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரத்தக் காட்டேரி போல காத்திருக்கின்றார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் புரிந்தவர்களுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி கிடைக்கின்றது. இதனை ஏற்க முடியாது. இது முற்றிலும் பிழையான விடயமாகும். இருப்பினும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான இரு கட்சிகளைத் தவிர பல கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் தனித்து முடிவுகளை எட்ட முடியாது இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாதென்பதற்காகவேதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு, பிரதி அமைச்சுப் பதவிகளை வழங்குகின்றார். இந்தநிலையில், 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் அவகாசம் வழங்க வேண்டும். நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பேராசையில் மஹிந்த இரத்தக் காட்டேரியாக காத்திருக்கிறார்: மனோ