வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தை மாவட்டத்தின் எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது அவரது இயலாமையையும், ஆற்றலின்மையையுமே காட்டுகின்றது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் வலியுறுத்தி வரும் நிலையில், அமைவிடத்தினை இறுதி செய்வது தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தை வவுனியா நகரப்பகுதியின் இரண்டு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்பது அதற்கான திட்ட வரைபாக இருக்கின்றது. அப்படி வவுனியாவில் திட்டமிட்டபடி பொருளாதார மையத்தை அமைக்க முடியாவிட்டால், திட்டத்தை மாற்றி மதவாச்சியில் பொருளாதார மையத்தை அமைக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபையினர் முதலில் வவுனியா தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மையத்தை அமைய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பின்னர், அரசியல் சுய இலாபங்களுக்காக பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டுமென கூறினார்கள்.
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தை வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மையமாகக் கருதிக்கொண்டும், திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொருளாதார மைய விவகாரத்தை இப்போது அநாவசியமான இழுபறி நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளனர்.
திட்டத்தை முழுமையாக விளங்கிக்க கொண்டு வவுனியாவில் அமையப்பெறுவதற்கான முடிவை எடுத்து செயற்படுத்தாமல் அதைத் தட்டிக்கழிக்கும் நோக்கத்துடன் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு செய்யப்போவதாக இரா.சம்பந்தன் கூறியிருக்கின்றார்.
வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தை பொருத்தமான இடத்தை தெரிவு செய்யத் தெரியாத கூட்டமைப்பின் தலைமையும், வடக்கு மாகாண சபையும், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை எடுப்பதற்கும், பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகளை பொறுப்பெடுப்பதற்கும், கோட்டுச் சூட்டோடு ஜெனீவாவுக்குப் போவதற்கும் தமிழ் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்க வேண்டும்.
வாக்குப் போட்ட தமிழ் மக்களிடம் அதற்கெல்லாம் கருத்துக்கணிப்பு நடத்தி தீர்மானம் மேற்கொண்டிருந்தால் அதை வரவேற்றிருக்கலாம். அவ்வாறில்லாமல் தமக்கான பதவிகளையும், அரசியல் சுகபோகங்களையும் தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்காமலே, அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுக்கள் நடத்திப் பெற்றுக் கொண்டவர்கள், சாதாரணமாக ஒரு மாவட்டத்தின் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமென நாடகமாடுகின்றனர்.
தவிரவும் அமையப்பெறுகின்ற பொருளாதார மையத்தை, வவுனியா மாவட்டத்தின் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும், பயனாளிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனுள்ளதாகவும், இலகுவான போக்குவரத்து வசதிகளுக்கு உகந்த இடத்திலும் அமையப்பெறுவதும் மிக அவசியமாகும்.
மக்களின் நலனை கவனத்திலெடுக்காமல் தமது அரசியல் நலனை முன்னிறுத்தி இவ்விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவார்களாக இருந்தால் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மையம் எமது கையிலிருந்து பறிபோய்விடும்.” என்றுள்ளார்.

0 Responses to பொருளாதார மையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்துவது கூட்டமைப்பின் இயலாமை: டக்ளஸ்