Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை இளம்பெண் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ராம்குமார் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இளம்பெண் சுவாதி மர்ம நபர் ஒருவரால் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொன்ற கொலையாளிக் குறித்து துப்பு எதுவும்கிடைக்காமல் ரயில்வே காவல்துறை திணறிய சமயத்தில், வழக்கு சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சென்னைப் பெருநகர காவல் துறையும் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கிராமத்தவரான ராம்குமார்தான் கொலையாளி என்று கைது செய்ய முற்படுகையில் ராம்குமார் பிளேடால் தமது கழுத்தைத் தாமே அறுத்துக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்பட்டது. இவருக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.

சென்னை புழல் சிறைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையில் நீதிபதியிடம் கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால்,நேற்று ராம்குமார் தரப்பு தாக்கல் செய்துள்ள ஜாமீன்  மனுவில் சுவாதி கொலைக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும்,தமது கழுத்தை போலீசார்தான் ஆயுதம் கொண்டு கிழித்து சித்ரவதை செய்தனர் என்றும் கூறப்பட்டு உள்ளது.அதோடு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்படுவதற்கு இரண்டு தினங்கள் முன்பு ஒரு நபரால் தாக்கப்பட்டார் என்கிற செய்தியையும் தாம் அறிந்ததாகவும் ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும், தம்மை ஜாமீனில் விடுவிக்குமாறும் மனுவில் ராம்குமார் கேட்டுக்கொண்டு உள்ளார். அந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

0 Responses to சுவாதி கொலையாளி எனப்படும் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணை: புதிய திருப்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com