நாட்டில் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரில் இடம்பெற்ற விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆயினும், அவ்வாறான நிலைமை நல்லிணக்க முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "எமது நாட்டில் போர் நடந்தது உண்மை. என்ன நடந்தது என்பது உண்மை. அது எங்கள் மனதிலிருந்து அகலாது. எனினும், அது நல்லிணக்கத்துக்கும் காயங்களை ஆற்றுவதற்கும் தடையாக அமைந்துவிடக்கூடாது.
ஆகவே, நாங்கள் உண்மையை அறிவோம். அரசாங்கம் இது தொடர்பில் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது. முதலாவது, வடக்கு, கிழக்கில் காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய விரும்புகின்றோம். அரசாங்கம் காணாமற்போனவர்கள் குறித்த அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அது நிறைவேற்றப்படும்.
தங்கள் உறவுகள் இன்னமும் உயிருடன் உள்ளனர் எனக் கருதிக்கொண்டிருக்கும் பலர் உள்ளனர். இது நாங்கள் அனுபவிக்கவேண்டிய கடினமான நடைமுறை. தென்னாபிரிக்காவிலிருந்து நாங்கள் இதனைக் கற்கவேண்டும். இரண்டாவது, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றோம். உண்மை, நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கவேண்டும்.
இலங்கை, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் தனக்குரிய வடிவத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது, மேலும் சில இடங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். சில இடங்களில் அது சாத்தியமில்லை. சிலர் இறந்துவிட்டனர். ஒரு கட்டத்தில் யார் யாரை தாக்குகின்றார் என்பதே தெரியாத நிலை காணப்பட்டது. அவ்வேளை வடக்கு, கிழக்கில் பல தனிப்பட்ட பகைகளும் தீர்க்கப்பட்டன.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்கால விடயங்கள் மக்கள் மனதை விட்டு அகலாது: ரணில்