இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை நீதியாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் உண்மையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பதை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற, தமிழ்த் தேசிய வீரர்கள் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்நாட்டில் தமிழ் மக்களும் தமிழ்ப் போராளிகளும் கொல்லப்பட்டால் அது தொடர்பில் விசாரணை தேவையில்லை என்பது, எழுதப்படாத சட்டமாக உள்ளது
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே இராணுவத்தினருக்கு எதிரான விசாரணை நடைபெறாதென அரசாங்கம் தெரிவித்தால், பிறகு யாருக்காக, எதற்காக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு தமது ஆதரவை வழங்கிய தமிழ் மக்களுக்கு, அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல், காணாமற்போனோர் தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாமல், அதிகார பகிர்வை ஏற்படுத்தாமல் அரசாங்கம் செயற்படுவது தொடர்பில், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளை நீதியாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை: சுரேஷ்