Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று மீன்வளத் துறை மையங்கள் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிட்டார்.

பவானிசாகர் அகரப்பேட்டை திருமங்கலக்கோட்டை நல்லிக்கோட்டை மஞ்சளாறு ஆகிய 6 இடங்களில் 13.65 கோடியில் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும்  வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்படும். பழவேற்காடு ஜாம்பவனோடை கரையூர்தெரு கொம்புத்துறை. மோர்பனை ஆகிய 5 இடங்களில் 9.77 கோடி செலவில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் முதுநகர் பழையாறு நாகை மீன்பிடி துறைமுகங்கள் வெள்ளாறு பழையாறு வெட்டாறு ஆகிய ஆற்று முகத்துவாரங்கள் 18.30 கோடி செலவில் தூர் வாரப்படும்.சேத்துப்பட்டு எரியில் சூரிய மின்சக்தி மீன் காட்சியகம் அமைக்கப்படும் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழு பயன்பெறும் வகையி்ல் READY TO COCK READY TO EAT கடல் மீன் உணவு தயாரிப்பு மையம்  துவங்கப்படும். 

மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை மற்றும்  கப்பற்படை  தகுதித் தேர்வு பயிற்சி வகுப்பு ஆயிரம் ரூபாய்.உதவித் தொகையுடன் வழங்கப்படும் மேலும்,  சென்னை மெரினா கடற்கறையில் பாய்மரப்படகு அகாடமி மற்றும் பாய்மரம், துடுப்பு படகு போட்டிக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.  உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 2 கோடியே 50  லட்சம் ரூபாய்ட் செலவில் மின் நூலகம் அமைக்கப்படும் 12  கோடி ரூபாய் செலவில் தேசிய மாணவர் படை பயிற்சி மையம் அமைக்கப்படும்.

0 Responses to மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியிட்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com