Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று, தேசிய மகளிர் ஆணையத் தலைவி லலிதா தெரிவித்துள்ளார்.

இன்று சென்னைக்கு வருகைத் தந்திருந்த லலிதா, செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, தமிழகத்தில் மகளிர் ஆணையத் தலைவி இடம் கடந்த 6 மாதங்களாகக் காலியாக உள்ளது என்று தெரிவித்தார். இதுக் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியும் ஒரு பதிலும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும், போலீசாருக்கு பெண்களின் பாதுகாப்புக் குறித்து போதிய பபுரிதல் இல்லை என்றும் லலிதா தெரிவித்தார். எனவே, பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: லலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com