நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 75 வீதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மீதமுள்ள 25 வீதமே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தான் அதிகாரத்துக்கு வரும் முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியால் யுத்தத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஆட்சிக் காலத்தில் முக்கால்வாசி யுத்தத்தை நிறைவு செய்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மீதமுள்ள கால் பகுதியே கடந்த ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவால் நிறைவு செய்யப்பட்டதாகவும் மிரிஹான பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போது, அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தனது ஆட்சிக் காலத்தில் தருவிக்கப்பட்ட ஆயுதங்களாலேயே யுத்தத்தை வெற்றி காண முடிந்ததாகவும், அது இல்லாவிடில் சிரமப்பட நேர்ந்திருக்கும் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தை வெற்றி கொள்ள தலைமைத்துவத்தை அளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிலர் கூறித் திரிவதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

0 Responses to என்னுடைய ஆட்சிக் காலத்திலேயே 75 வீதமான யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது: சந்திரிக்கா குமாரதுங்க