Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவுக்கான பொருளாதார மையங்கள் மதகுவைத்தகுளம் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த அதிகாரிகள் சகிதம் வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை வவுனியா புறநகர்ப்பகுதியில் உள்ள மதகுவைத்தகுளம் மற்றும் வவுனியாவுக்கு வடக்கே மாங்குளம் நகரம் ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

அமைச்சர்களும், அதிகாரிகளும் மதகுவைத்தகுளத்தைப் பார்வையிட்டதுடன் அங்கு உடனடியாக வேலைகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்துள்ளனர்.

வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா என்று உறுதியாகத் தீர்மானம் எடுக்க முடியாதிருந்த நிலையில், வவுனியா நகரில் ஒன்றும் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் ஒன்றுமாக இரண்டு நிலையங்களை அமைப்பதென அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வவுனியாவுக்கான பொருளாதார மையங்கள் மதகுவைத்தகுளம், மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்க முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com