Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும்இ மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

முற்பகல்-11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்ட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நமபகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பில் மயிலிட்டிக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கு.குணராஜன்இ மயிலிட்டிக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் ந.இரட்ணராஜா மற்றும் மல்லாகம் கோணப் புலம் நலன்புரி முகாம்இ மல்லாகம் நீதவான் முகாம் ஆகிய முகாம்களின் தலைவர்கள் உள்ளிட்ட முகாம்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பருத்தித்துறை வியாபாரி மூலையில் தற்காலிகமாக இயங்கிவரும் மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த-17 ஆம் திகதி இடம்பெற்ற மீனவர்களுக்கான விசேட கூட்டத்தில் மயிலிட்டிப் பிரதேசத்தை உடனடியாக விடுவிக்காவிடில் பாரிய மக்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்துவதென ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் எதிரொலியாகவே பலாலி இராணுவத் தளபதி மயிலிட்டி மீனவ பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்போது விரைவில் காங்கேசன்துறை முதல் தையிட்டிச் சந்தி வரை முதற்கட்டமாகவும்இ ஜே-251 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மயிலிட்டிச் சந்திஇ மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றை இரண்டாவது கட்டமாகவும் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதிஇ மயிலிட்டிப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளான மயிலிட்டி வடக்குஇ மயிலிட்டி தெற்கு ஆகிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் காணப்படுவதால் அவற்றைப் படிப்படியாக அகற்றிய பின்னர் இந்த வருட இறுதிக்குள் விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன் விடுவிக்கப்படவுள்ள பிரதேசங்களை சந்திப்பின் பின் இராணுவத் தளபதி மயிலிட்டிப் பிரதே சத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சிலரை நேரடியாக அழைத்துச் சென்று காண்பித்ததாகவும் தெரிய வருகிறது.

இதேவேளைஇ மயிலிட்டிப் பிரதேசத்தை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் இதன்போது இராணுவத் தளபதியால் உறுதியளிக்கப்ப ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to மயிலிட்டியின் சிலபகுதிகளை விடுவிக்க இணக்கம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com