Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் போராளிகள் சிலரை யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானப்படையின் மருத்துவர் குழுவை வைத்து பரிசோதனை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, “உள்ளூர் மருத்துவர்களால் முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்ய முடியாத பட்சத்திலேயே வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களது உதவிகள் கோரப்படும். எனினும், அவ்வாறான சந்தர்ப்பம் இன்னும் உருவாகவில்லை.

யாழ்ப்பாணத்தில்  80 சதவீதமானவர்கள் தமிழ் மருத்துவர்களே. சம்பந்தப்பட்ட வடக்கு மாகாண அமைச்சருக்கு இதுகுறித்து ஆராய்ந்து, என்னிடம் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கேட்டிருந்தேன். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஒரு மருத்துவர். மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரனை விடவும் அமைச்சர் சத்தியலிங்கத்திற்குத் தெரியும்.

அமெரிக்க மருத்துவர்களுக்கு வழங்குவதை விடவும் யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவர்களுக்கு பரிசோதனை செய்ய முடியுமா என்பதை சந்தர்ப்பம் வழங்கித்தானே பார்க்க வேண்டும். கண்டறிய முடியாத பட்சத்தில் தானே அமெரிக்காவின் உதவி நாடவேண்டும். வைத்தியசாலையில் உள்ளூர் மருத்துவர்கள் இருக்கின்ற நிலையில் நடமாடும் சேவையை வழங்க வந்த மருத்துவர்களை ஏன் அழைக்க வேண்டும்? அப்படியொரு முறையும் இல்லை. எமக்கு முடியாத பட்சத்திலேயே மற்றவர்களுடைய உதவி நாடப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to விச ஊசி விவகாரம்; சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை அரசாங்கம் நிராகரித்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com