காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்படவுள்ள அலுவலகம் கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கில் காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இடம்பெற்ற குறித்த போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தம்முடைய கருத்துக்களை உள்வாங்கி அமைக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளை சர்வதேச நாடுகள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்கான அலுவகத்தினை அமைப்பது தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. குறித்த அலுவலகம் கொழும்பிலேயே அமைக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to காணாமற்போனோர் அலுவலகம் கிளிநொச்சி- முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும்; உறவினர்கள் போராட்டம்!