எதிர்வரும் 14ம் திகதி வடக்கினை ஒன்ற திரட்டி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்று கூடலிற்கு “எழுக தமிழா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கண்டன பேரணி மற்றும் பொங்குதமிழ் ஒன்று கூடலிணை இணைக்கும் பெயராக “எழுக தமிழா” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழர்களை ஒரு கோசத்தின் கீழ் – ஒரு கொள்கையின் கீழ் முழுமையாக அணிதிரட்டும் செயலுக்குப் பெயர் பொங்குதமிழ். தமிழர்களைப் பீடித்த மொத்த அடக்குமுறைகளையும் உடைத்தெறியும் பொதுக்களத்தை குறிக்கும் குறியீடு. ஊர் கூடி, ஆடிப் பாடி, விடுதலைக் கூத்தாடி நம்மை நாமே ஆளுவதையும், அனைத்துவித தளைகளிலிருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ளுதலையும் பிரகடனம் செய்துகொள்ளும் மந்திர உச்சாடனமே பொங்குதமிழ்.
எனவே பொங்குதமிழ் என்பது ஆன்மத்துச் சொல். நூற்றாண்டுகால அடிமைத்தனத்தை உடைத்தெறியும் தமிழ் சமூகத்தின் கூட்டுணர்வுச் சொல்லென அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையினில் கண்டன பேரணி மற்றும் ஒன்றுகூடலை “எழுக தமிழா” என பெயரிட ஏற்பாட்டுக்குழு முடிவு செய்துள்ளது.
➢ சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கக் கூடிய இத்தகையை நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும்.
➢ தமிழ் மக்கள் முழுமையாக மீளக் குடியேறக்கூடிய வகையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்குமாறும்.
➢ தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேறுமாறும்.
➢ தமிழின அழிப்பிற்கான பொறுப்புக் கூறலுக்காக ஒரு முழு அளவிலான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியும்.
➢ காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
➢ அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்குமாறும் அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரியே இந்த மாபெரும் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

0 Responses to வடக்கின் போராட்டத்திற்கு ”எழுக தமிழா” பெயர் சூட்டப்பட்டது!