Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கான அழைப்பிதழை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனவிரத்ன நேரில் சென்று வழங்கியிருந்தார். அந்த அழைப்பிதழைப் பெற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.

குருநாகலில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் போசகர்களான முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பக்கத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

0 Responses to சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் பங்கேற்க மஹிந்த இணக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com