Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு வாக்காளர் அட்டை அனுப்பிவைக்கப்படாததால் இன்றைய அரசதலைவர் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொண்டபோதும் தனக்குரிய வாக்காளர் அட்டை அனுப்பிவைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் தேர்தலில் வாக்களிக்காததால் மக்கள் இது குறித்து பிழையாக விளங்கிக்கொள்ளவேண்டாம் என்றும் தான் சிறிலங்காவின் பிரஜை என்றும் அதனால்தான் தான் சிறிலங்காவின் இராணுவ தளபதியாகவும் படைகளின் பிரதானியாகவும் பதவி வகித்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தான் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சகல தகுதியும் உடையவர் என்று தெரிவித்துள்ள சிறிலங்கா அரசமைப்பின் 31 ஆவது சரத்தின் பிரகாரம் தனக்கு அந்த உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் இன்றைய தேர்தலில் வாக்களிக்காததை கூறி தனக்கெதிராக அரசுத்தரப்பு மேற்கொள்ளும் பிரசாரத்தை நம்பாமல் அனைத்து மக்களும் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

0 Responses to பொன்சேகா இன்று வாக்களிக்கவில்லை: தனக்கு வாக்காளர் அட்டை அனுப்பிவைக்கப்படவில்லையாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com