Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை  ஆரம்பிக்கவிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவப் படகுகள் எதுவும் மீள ஒப்படைக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கடற்றொழில், நீரியல்வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்  மஹிந்த அமரவீர  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழையும் படகுகளை கைப்பற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான பணிப்புரை வழங்கியிருப்பதாகவும், இதுவரை கைப்பற்றப்பட்ட படகுகள் எதுவும் மீள வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் சுமார் 125 படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் என்பன தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுடைய படகுகளோ உபகரணங்களோ மீள வழங்கப்படாது. எதிர்வரும் 05ஆம் திகதி இந்தியா செல்லவிருப்பதாகவும், இவ்விஜயத்தின் போது மீனவர் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் தீர்க்கமுடியுயா என முயற்சிக்கவிருப்பதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; எதிர்வரும் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com